Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமான நிலையத்தில் தொழுகை நடத்த அனுமதிப்பதா? காங்கிரஸ் அரசுக்கு பாஜக கண்டனம்..!

Advertiesment
பெங்களூரு விமான நிலையம்

Siva

, திங்கள், 10 நவம்பர் 2025 (08:19 IST)
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் டெர்மினல் வளாகத்தில் தொழுகை நடத்தப்பட்டதற்கு கர்நாடக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியில் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
 
பாஜக செய்தி தொடர்பாளர் விஜய் பிரசாத், முதல்வர் சித்தராமையா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோரிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.
 
அதிகப் பாதுகாப்புள்ள விமான நிலைய பகுதியில் தொழுகை நடத்த இந்த நபர்கள் முன் அனுமதி பெற்றனரா? உரிய அனுமதி பெற்ற பின்னரும் ஆர்எஸ்எஸ்-ஸின் ஊர்வலத்தை அரசு எதிர்க்கும்போது, கட்டுப்படுத்தப்பட்ட பொது இடத்தில் இதுபோன்ற செயல்களை ஏன் கண்டுகொள்ளவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
 
இந்த பகுதியில் நடந்ததாக கூறப்படும் தொழுகை சம்பவம், ஒரு முக்கியமான பாதுகாப்பு மண்டலத்தில் தீவிரமான அச்சுறுத்தலை ஏற்படுத்தாதா என்றும், அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். விமான நிலைய வளாகத்தில் தொழுகை நடத்தப்பட்ட விவகாரம் மாநிலத்தில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயோத்தியில் 'ராமாயண பூங்கா': ராமர், சீதைக்கு மட்டுமல்ல, ராவணனுக்கும் பிரம்மாண்ட சிலை..!