பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

Mahendran
செவ்வாய், 28 அக்டோபர் 2025 (18:37 IST)
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி இன்று  தங்கள் பிரதான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது.
 
RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர் பவன் கெரா ஆகியோர் முன்னிலையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணிக்கு கடும் போட்டியளிக்கும் நோக்கில், வாக்காளர்களை கவரும் வகையில் பல முக்கிய வாக்குறுதிகளை 'இந்தியா' கூட்டணி வழங்கியுள்ளது.
 
முக்கிய வாக்குறுதிகள்:
 
1. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்.
 
2.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம்.
 
3. ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்குக் கட்டாயம் ஒரு அரசு வேலைவாய்ப்பு.
 
4.  குடும்பத் தலைவியாக இருக்கும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,500 வழங்கப்படும்.
 
இந்த அதிரடி வாக்குறுதிகளின் மூலம், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ஆட்சியை பிடிக்க மகாபந்தன் கூட்டணி தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம்: தவெக புறக்கணிக்க முடிவா?

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments