பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஜீரோ.. பிகாரில் என்டிஏ ஜெயிக்க அவர்தான் காரணமா

Mahendran
புதன், 12 நவம்பர் 2025 (11:25 IST)
பீகார் சட்டமன்ற தேர்தல் கருத்துக் கணிப்புகள் , அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அவர்களின் 'ஜன் சுராஜ் கட்சி'க்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. இக்கட்சி 'உச்சத்தில் அல்லது தரையில்' இருக்கும் என்று கிஷோர் கூறிய நிலையில், முடிவுகள் கட்சி 'தரையில்' இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
 
தேர்தலில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி, பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் 0 முதல் அதிகபட்சம் 5 இடங்களுக்குள் மட்டுமே பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கிடையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 147 இடங்களுடன் பெரும்பான்மையை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் 90 இடங்களுடன் தோல்வியைச் சந்திக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
 
ஜன் சுராஜ் கட்சி வெற்றி பெறாவிட்டாலும், அது பெறும் கணிசமான வாக்குகள் பெரும்பாலும் மகாகத்பந்தன் கூட்டணியின் வாக்குகளை பிரித்து, எதிர்க்கட்சிக்கு பாதகமாக அமைந்துவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments