Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யூடியூப் மற்றும் கூகுள் மீது ஐஸ்வர்யா ராய் வழக்கு: ரூ.4 கோடி இழப்பீடு கேட்டதால் பரபரப்பு..!

Advertiesment
ஐஸ்வர்யாராய்

Mahendran

, வியாழன், 2 அக்டோபர் 2025 (13:48 IST)
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர், தங்களுக்கு எதிரான செயற்கை நுண்ணறிவு  மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை நீக்காதது மற்றும் அந்த வீடியோக்களை அனுமதித்ததற்காக யூடியூப்  நிறுவனம் மீது ரூ.4 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளனர்.
 
ஐஸ்வர்யா ராய் பச்சன் குறித்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாசமான மற்றும் அவதூறான வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டன. இந்த வீடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
 
இந்த வீடியோக்களை நீக்க கோரி, பச்சன் குடும்பத்தினர் யூடியூப் தளத்திற்கு பலமுறை சட்டரீதியான அறிவிப்புகளை அனுப்பியுள்ளனர். இருப்பினும், இந்த ஆபாச வீடியோக்களை யூடியூப் நிறுவனம் தாமதமின்றி நீக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இதன் விளைவாக, தங்கள் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் ஏற்பட்ட மன உளைச்சல், அவதூறு மற்றும் நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் யூடியூப் மீது ரூ.4 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் துயரத்திற்கு முதல்வர் எப்படி பொறுப்பாக முடியும்? டாக்டர் ராமதாஸ் கேள்வி!