Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று மத்திய பட்ஜெட் 2026: பங்குச்சந்தையில் ஏற்றமா? இறக்கமா?

Advertiesment
பங்குச் சந்தை
2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந்த முக்கிய நிகழ்வையொட்டி, வழக்கமாக விடுமுறை நாளான இன்றும்(பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
 
பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் ஒருவித பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது. வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 296 புள்ளிகள் சரிந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 122 புள்ளிகள் சரிவைக் கண்டது.
 
ஆனால் ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தை உயரத்தொடங்கியது தற்போது  சென்செக்ஸ் 82,495 என்ற புள்ளிகளிலும், நிஃப்டி 25,379 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.  

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு: வணிகர்களுக்கு அதிர்ச்சி, இல்லத்தரசிகளுக்கு நிம்மதி!