Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு.. இந்த மாதத்திற்குள் ரூ.1.50 லட்சம் போகுமா?

Advertiesment
Gold Price Today
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவையால், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,06,240 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
சுத்த தங்கமான 24 காரட் தங்கத்தின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் சுத்த தங்கம் ரூ.14,487 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.1,15,896 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.310-க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு வரலாற்று உச்சமாக ரூ.3,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 
தொழில் துறை சார்ந்த தேவைகள் மற்றும் உலகளாவிய வர்த்தக சூழல்களே இந்த திடீர் விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவுக்கும் - திமுகவும் இடையே தான் போட்டி.. 3வது கட்சியை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன: ஈபிஎஸ்