Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த தங்கம் விலை.. மாலை விலை நிலவரம்..!

Advertiesment
Gold Price Drop Tamil Nadu
தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக சரிந்து நுகர்வோரிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலையில் கிராமுக்கு 600 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் 350 ரூபாய் சரிவை கண்டது. இதன் மூலம் ஒரே நாளில் சவரனுக்கு சுமார் 7,600 ரூபாய் வரை குறைந்து, மொத்தமாக கிராமுக்கு 950 ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது.
 
தற்போதைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 15,850 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,26,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு கிராம் 17,291 ரூபாயாக உள்ளது. 
 
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 405 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 4,05,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  இந்த திடீர் விலை வீழ்ச்சி, நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் எப்போது? சலுகைகள் கொட்டி கிடக்குமா? பரபரப்பு தகவல்..!