Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மூன்றே நாளில் ரூ.1,25,000 வெள்ளி விலை சரிவு.. தங்கம் விலையும் பயங்கர சரிவு..!

Advertiesment
தங்கம் விலை சரிவு
மத்திய பட்ஜெட் 2026-ன் தாக்கத்தால் தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 7,600 குறைந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன் ஒரு சவரன் தங்கம் ரூ. 134,400-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி அது ரூ. 1,11,600-ஆகக் குறைந்துள்ளது. அதாவது மூன்றே நாளில் ஒரு சவரனுக்கு சுமார் ரூ. 23,000 குறைந்துள்ளது.
 
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.425,000.00 என்று விற்பனையான நிலையில் இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ வெள்ளி ரூ. 3,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் மூன்றே நாளில் ரூ.1,25,000 வெள்ளி விலை சரிந்துள்ளது.
 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. திருமண சீசன் தொடங்கவுள்ள நிலையில், இந்த விலை குறைப்பு நகை வாங்குவோருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி சென்னை - பெங்களூரு 1 மணி நேரம் தான்.. சென்னை - ஐதராபாத் 3 மணி நேரம் தான்.. அதிவேக ரயில் அறிமுகம்..