Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்திகை மாத சிறப்பு: ஆறுபடை வீடுகளில் முருகனை வழிபட்டால் 16 பேறுகள் நிச்சயம்!

Advertiesment
கார்த்திகை மாதம்

Mahendran

, திங்கள், 10 நவம்பர் 2025 (18:59 IST)
கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டால், வாழ்வில் 16 வகையான பேறுகளையும் செல்வ செழிப்பையும் பெறலாம் என்பது ஐதீகம்.
 
ஆறுமுகங்கள் கொண்ட முருகப்பெருமான், ஆறு வகையான கவலைகளை நீக்கும் வல்லமை படைத்தவர். 12 கரங்களால் அள்ளி கொடுக்கும் வள்ளலாக அவர் அருள்பாலிக்கிறார்.
 
சிவபெருமானின் நெற்றி கண்ணில் இருந்து வந்த ஆறு தீப்பொறிகள் சரவண பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாறி, பின்னர் பார்வதியால் ஒருவராக இணைந்ததே முருகப்பெருமான் ஆவார். இதனால் அவருக்கு காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன் போன்ற பெயர்கள் உண்டு.
 
ஆறுபடை வீட்டு பலன்கள்:
 
திருப்பரங்குன்றம்: திருமணம், மகிழ்ச்சி (தெய்வானை திருமணம் நடந்த இடம்).
 
திருச்செந்தூர்: வெற்றி, பகை நீக்கம் (சூரசம்ஹாரம்).
 
பழநி: ஞானம், தெளிவான சிந்தனை (ஞானப்பழத்திற்காக நின்ற இடம்).
 
சுவாமிமலை: கல்வி, தலைமைப் பண்பு (தந்தைக்கு உபதேசம் செய்த இடம்).
 
திருத்தணி: கோபம் தணிதல், பண வரவு (சினம் தணிந்த இடம்).
 
பழமுதிர்சோலை: அறிவாற்றல், கல்வியில் வெற்றி (அவ்வைக்கு அறிவுரை கூறிய இடம்).
 
வாய்ப்புள்ளவர்கள் இந்த ஆறு தலங்களுக்கும் சென்று வழிபட்டால், பயமற்ற வாழ்வும் பண வரவும் கூடும்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முருகன் வழிபட்ட திருமுருகநாதர்: சுந்தரரின் திருவிளையாடல் நடந்த திருமுருகன்பூண்டி!