வீடுகளில் பொதுவாக காணப்படும் எலிகளால், மனிதர்களின் கல்லீரல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
தமிழ்நாடு விலங்கு மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், சென்னையில் உள்ள கருப்பு எலிகளில் நான்கில் ஒரு எலிக்கு 'சி.ஹெப்பாடிகா' என்ற புழு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் பிடித்த 55 எலிகளில், 38% எலிகளில் இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் உள்ள ஒவ்வொரு 10 எலிகளில் 4 எலிகள் இந்த ஒட்டுண்ணியை சுமந்து செல்கின்றன. இந்த புழுவின் முட்டைகள் எலிகளின் கல்லீரலில் உருவாகின்றன. எலிகள் இறந்த பிறகு, அவற்றை உண்ணும் பூனைகள், நாய்கள், அல்லது பாம்புகள் மூலம் இந்த முட்டைகள் மண்ணில் கலக்கின்றன. பின்னர், மனிதர்களுக்கு மண்ணிலிருந்து தொற்று பரவுகிறது.
மனித உடலில் நுழையும் இந்த புழு முட்டைகள் கல்லீரலில் குடியேறி, கல்லீரல் அழற்சி, கல்லீரல் வீக்கம், காய்ச்சல், மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சிலருக்கு, இது கல்லீரல் செயலிழப்பு மற்றும் உயிரிழப்பு வரைகூட வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.