Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

Advertiesment
sleep
உடலுக்கு தூக்கம் என்பது மிகவும் அவசியம். ஒரு மனிதர் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.. அதேபோல் அந்த தூக்கம் எந்த இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும்.. ஆனால் எல்லோருக்கும் அப்படி தூக்கம் அமைகிறதா என்றால் இல்லை. சரியான தூக்கம் மட்டுமே அடுத்த நாள் எழுந்து சுறுசுறுப்பாக வேலையை துவங்க மனிதர்களுக்கு உதவும்.. சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் எல்லா வேலையும் கெட்டுப் போகும். எனவே இவ்வளவு முக்கியமான தூக்கத்தை சிறப்பானதாக மாற்ற சில விஷயங்களை பின்பற்றினாலே போதுமானது.

குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவது,  குறிப்பிட்ட நேரத்தில் எழுவதை உடலுக்கும், மனதுக்கும் பழக்க வேண்டும்.

தூங்குவதற்கு முன் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன் பார்ப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.. குறிப்பாக இருட்டு அறையில் படுத்து கொண்டு செல்போனை கண்ணுக்கு அருகில் வைத்துக் கொண்டு பார்க்கக் கூடாது.. அது கண்களை பாதித்து தூக்கத்தை கெடுக்கும்..

தூங்குவதற்கு முன் தேநீர், காப்பி, மது மற்றும் பரோட்டா போன்ற கனமான உணவுகளை தவிர்க்க வேண்டும்..

வெளிச்சமான இடத்தை விட இருள் சூழ்ந்த இடத்தில் நன்றாக தூக்கம் வரும்.. எனவே எப்போதும் விளக்கை அணைத்துவிட்டு தூங்க வேண்டும்..

இரவு நேரத்தில் வயிறுமுட்ட சாப்பிடக்கூடாது.. அதேபோல் சாப்பிட்டவுடன் தூங்க செல்லக்கூடாது.. தூக்கத்திற்கும், இரவு உணவுக்கும் இடையே 3 மணி நேரம் இடைவெளி இருந்தால் நல்லது.. குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இருக்கலாம்.. அதேபோல், இரவு உணவுக்கு பின் மெதுவான நடைப்பயிற்சி மிகவும் நல்லது.

இந்த விஷயங்களை பின்பற்றினாலே சிறந்த தூக்கத்தினை பெற முடியும்.. முயற்சி செய்து பாருங்கள்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?!.. மிஸ் பண்ணாதீங்க..