Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

Advertiesment
snacks

Mahendran

, வியாழன், 22 ஜனவரி 2026 (19:49 IST)
பொதுவாகவே பலருக்கும் வீட்டில் சாப்பிடுவது போதாமல் வெளியே சென்று ஸ்னேக்ஸ்களை சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. குறிப்பாக இது குளிர் காலம் என்பதால் மாலை 6:00 மணிக்கு மேல் போண்டா, பஜ்ஜி, சமோசா, பர்கர், பீட்சா போன்ற உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் சிற்றுண்டிகளை பலரும் சாப்பிடுகிறார்கள். ஆனால் இவை எல்லாமே உடலின் செரிமானத்தை கடுமையாக பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மாலை 6 மணிக்கு மேல் நாம் சாப்பிடும் வடை, பஜ்ஜி, சமோசா, பக்கோடா போன்ற உணவுகள் செரிமானத்தை பாதிப்பதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மோசமாக பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதேபோல் உடலில் கொழுப்பும் அதிகரிக்கும் என்கிறார்கள். எனவே, மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வெண்ணை அதிகமாக உள்ள பீட்சா, பாப்கான் அதிக சக்கரை கொண்ட இனிப்பு தின்பண்டங்கள், பானி பூரி, பேல் பூரி போன்ற தெரு உணவுகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் உடம்பில் இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து ரத்த சக்கரை அளவு சீர்குலைத்து விடும். இந்த உணவுகள் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து கெட்ட கொழுப்புகளை உற்பத்தி செய்யும்.

அப்படியெனில், மாலையில் என்ன உணவுதான் சாப்பிடலாம் என்கிற கேள்வி எல்லோருக்கும் வரும் அதையும் பார்ப்போம்.

எண்ணெய் இல்லாமல் பொரித்த மக்கனா உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.. வேக வைத்த இனிப்பு சோளம், சூடான காய்கறி சூப், மசாலா கொண்டை கடலை, மைதாவுக்கு பதிலாக கோதுமை மாவில் வேக வைத்த மோமக்கள் ஆகியவற்றை சாப்பிடலாம். இதைவிட்டுவிட்டு  எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதாலும், ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவதாலும் உடலில் செரிமானத்தை பாதிப்பதோடு இரவில் தூக்கத்தையும் கெடுத்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...