மனித உடலுக்கு துக்கம் என்பது மிகவும் அவசியம். குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்கு உடல் மட்டுமல்ல. மனதில் இருக்கும் பிரச்சனைகளும் காரணமாக அமையும். உடல்ரீதியான பிரச்சனை மற்றும் மனதில் மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் நிம்மதியான தூக்கம் வரும். இது அல்லாமல் வேறு சில காரணங்களும் தூக்கத்தை கெடுக்கும். எனவே, இரவில் நல்ல தூக்கம் வர என்ன செய்யலாம் என சில டிப்ஸ்களை பார்ப்போம்.
இரவில் நல்ல தூக்கம் இல்லையென்றால் அடுத்த நாள் பகல் முழுவதும் உடல் சோர்வாகவே இருக்கும். எனவே, தூக்கம் மிகவும் முக்கியம். பரபரப்பான வாழ்க்கையில் தூக்கத்தை கெடுக்கும் பல விஷயங்கள் நம்மை சுற்றி நிகழ்கிறது. நல்ல தூக்கம் இருந்தால்தான் மனமும் உடலும் அமைதியை பெறும்.
இரவில் தூங்குவதற்கு முன் செரிமானத்தை தாமதிக்கும் ஜங்க் ஃபுட் உணவுகளை தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு முன் அதிக நேரம் டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல், இருட்டறையில் செல்போன் பார்க்கக் கூடாது. இந்த இரண்டும் கண்களை பாதித்து தூக்கத்தை தாமதப்படுத்தும்.;
தூங்குவதற்கு முன் காபி, டீ போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும்.. அதேபோல், வெளிச்சமான அறையை தவிர்த்து விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டறையில் தூங்க வேண்டும்.. பெரிதாக யோசிக்காமல் இதை பின்பற்றினாலே நல்ல தூக்கத்தை பெறலாம்.