Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தக்காளியை ஃபிரிட்ஜில் வைத்து சமைத்தல் நல்லதா?!... உண்மையை தெரிஞ்சுக்கோங்க!..

Advertiesment
tomatto
உலகமெல்லாம் மக்கள் சமையலில் தக்காளியை பயன்படுத்தினாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தக்காளி அதிகளவு சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சைவம், அசைவம் என எந்த வகையான சமையல் என்றாலும் அடிப்படை அதற்கு தக்காளி வெங்காயம் முக்கியமானது. எனவே அப்படிப்பட்ட தக்காளி பற்றி சில முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் பல பெண்களிடமும் இருக்கிறது. உண்மையில் அது நல்லதா என தெரிந்து கொள்வது நல்லது. பழுத்த தக்காளியை ஃப்ரிட்ஜில் சில நாட்கள் வைக்கலாம்.. அது கூட அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.. அப்படி வைத்தால் அதன் சுவையும் ஊட்டச்சத்துக்களும் குறையும். அதற்கு மேல் வைக்கும்போது தக்காளி அழுகிப்போகும். மேலே பளபளவென்று தெரிந்தாலும் உள்ளே அழுகிப் போயிருக்கும்.

அதேபோல் பழுக்காத தக்காளியை ஃப்ரிட்ஜில் வைக்கவும் கூடாது.. அது பழம் பழுப்பதை தடுத்துவிடும். இதில் முக்கிய அறிவுரை என்னவென்றால் வாங்கிய தக்காளிகளை 2 அல்லது 3 நாட்களில் முழு தக்காளிகளையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் பிரிட்ஜில் வைக்காமல் இருப்பதே சிறந்தது. ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ச்சியான சூழல் தக்காளியின் இயற்கையான சுவையை கெடுத்து விடும். எனவே தக்காளி முடிந்தவரை விரைவாக பயன்படுத்திவிட வேண்டும்.

அதேபோல் தக்காளி பழுப்பதற்கு மிதமான வெப்பமும், காற்றோட்டமும் முக்கியம். எனவே அரை வெப்ப நிலையில் சூரிய ஒளிபடாத இடத்தில் வைத்தால் தக்காளி விரைவில் பழுத்து விடும்
. தக்காளியை ஃப்ரிட்ஜில் அதிக நாட்கள் வைக்கும்போது அதன் மீது பூஞ்சை அல்லது பாசி வளர வாய்ப்பு உண்டு. அந்த தக்காளியை உட்கொள்ளும் போது உடலில் வயிற்றுப்போக்கு. குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, செரிமான பிரச்சனை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இதுபோன்ற தக்காளியை சாப்பிடும்போது அவர்களுக்கு அது ஆபத்தாக அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குளிர்கால உடல் பிரச்சனையை போக்கும் கேரட்!.. இவ்வளவு நன்மைகளா!...