Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

Advertiesment
curd

Mahendran

, சனி, 24 ஜனவரி 2026 (19:25 IST)
பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளில் தயிர் முக்கியமானது. பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த உணவாக தயிர் இருக்கிறது. அதேநேரம் குளிர் காலத்தில் தயிர் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் சளி பிடிக்குமா? என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.. இதற்கு பயந்து கொண்டே குளிர்காலத்தில் பலரும் தயிர் சாப்பிடாமல் தவிர்ப்பதுண்டு. உண்மை என்னவென பார்ப்போம் வாருங்கள்..

குளிர்காலத்திலும் தயிர் சாப்பிடலாம்.. ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடக்கூடாது.. ஏனெனில் தயிர் இயற்கையாகவே குளிர்ச்சியானது.. அதை பிரிட்ஜில் வைக்கும் போது மேலும் குளிர்ச்சியாகும். அதை உடனே சாப்பிடும்போது தொண்டை வலி மற்றும் சளியை ஏற்படுத்தும்.. எனவே இந்த தவறை செய்யக்கூடாது.

ஃபிரிட்ஜில் இருந்து தயிரை எடுத்தால் குறைந்தபட்சம் அந்த குளிர் அடங்குவதற்கு ஒரு அரை மணி நேரம் ஆகும். எனவே அதன் பின்னரே தயிரை உண்ண வேண்டும்.. அதேபோல் குளிர்காலத்தில் இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது.. அது சளிக்கு வழிவகுக்கும்.. குளிர்காலத்தில் காலை, மதியம் ஆகிய வேளைகளில் தயிர் சாப்பிடலாம். அதேநேரம், இருமல், சளி, சைனஸ் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் குளிர்காலத்தில் தயிரை தவிர்த்து விடுவது நல்லது.

குளிர்காலத்தில் மனித உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும்.. எனவே பசி தூண்டப்படும்.. அதனை கட்டுப்படுத்த நாம் அதிகமாக சாப்பிடவும் தோணும்.. எனவே தயிரை உண்ணும்போது அது ஜீரணத்திற்கு உதவி செய்யும்.. எனவே, குளிர்காலத்தில் தயிர் முக்கியமானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...