Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கணக்கு இல்லாத ஏடிஎம்மிலும் இனி டெபாசிட் செய்யலாம்

வங்கி கணக்கு இல்லாத ஏடிஎம்மிலும் இனி டெபாசிட் செய்யலாம்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (11:18 IST)
வங்கி கணக்குகள் இல்லாத ஏடிஎம்மிலும் டெபாசிட் செய்யலாம் என்ற திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.




 

ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், சம்பந்தப்பட்ட வங்கி ஏடிஎம்மில் அல்லாமல் எல்லா வங்கி ஏடிஎம்மிலும் பணம் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள்  தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மில்தான் தங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய முடியும் என்ற நிபந்தனை இருந்தது.

இனி, எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும், வேறு வங்கி ஏடிஎம் மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் வர உள்ளது. இத்திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மூன்று வங்கிகளுக்கு இதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி தேசிய பேமன்ட் கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வேறு வங்கி ஏடிஎம்மில் டெபாசிட் செய்வது குறித்து பரிசோதனை முயற்சியாக 3 வங்கிகளில் செயல்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து பரிசோதனை முயற்சி துவங்கும். டெபாசிட்டுக்கு ரூ.10,000 வரை ரூ.25, ரூ.50,000க்கு மேல் ரூ.50 சேவை வரியாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments