Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியர்களிடம் பேசமாட்டேன்… ரவி சாஸ்திரியைப் புறக்கணித்த பாகிஸ்தான் கேப்டன்!

Advertiesment
ஆசிய கோப்பை

vinoth

, திங்கள், 29 செப்டம்பர் 2025 (08:05 IST)
நேற்று துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.  இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை, இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டி ஒன்பதாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.

ஆனால் வெற்றிக்குப் பின்னர் பாகிஸ்தான் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோஷின் நக்வி கையால் கோப்பையை வாங்க மாட்டோம் என இந்திய அணி முடிவெடுத்ததால் கோப்பை இல்லாமல் இந்திய அணி வெற்றியைக் கொண்டாடியது.

அதே போல பாகிஸ்தான் தரப்பிலும் இதுபோன்ற செயல்ககளில் ஈடுபட்டனர். தோல்விக்குப் பிந்தைய நிகழ்வில் பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆஹா ரவி சாஸ்திரி வர்ணனை செய்து கொண்டிருந்த நிலையில் ‘இந்தியர்களிடம் பேசமாட்டேன்’ என பேசாமல் சென்றார். விளையாட்டுக்கு இடையில் இரு அணி வீரர்களும் அரசியலை நுழைத்து வெறுப்பை விதைப்பது விளையாட்டின் மாண்புக்கு எதிராக உள்ளதாகக் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிய கோப்பை வெற்றி: கோப்பையின்றி கொண்டாடிய இந்திய அணி - இணையத்தில் பரவிய மீம்ஸ்!