Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

12 ரன்களுக்கு 10 விக்கெட் : இளம் இந்திய வீரர் நாஜில் அபார சாதனை

12 ரன்களுக்கு 10 விக்கெட் : இளம் இந்திய வீரர் நாஜில் அபார சாதனை
, வெள்ளி, 6 மே 2016 (14:17 IST)
இந்தியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்டோருக்கான கிரிக்கெட் போட்டி ஒன்றில் கேரள வீரர் ஒருவர், ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
 

 
கேரளாவில் மாவட்ட அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் கன்னூர், மலப்புரம் அணிகள் மோதின.
 
முதலில் களமிறங்கிய மலப்புரம் அணி முதல் இன்னிங்ஸில் 26 ரன்கள் எடுத்தது. இதில், 9.4 ஓவர்களை வீசிய நாஜில் 12 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.
 
இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ள நாஜில், “நான் கேரளா ஒரு நாள் விளையாட விரும்புகிறேன். இந்த நேரத்தில் நான் எனது மாவட்ட அணிக்காக சிறப்பாக விளையாடியதற்காகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
 
கேரளாவில் நடைபெற்றுள்ள உள்ளூர் போட்டிகளில் இதற்கு முன்னதாக 1985-86ஆன் ஆண்டுகளில் நடைபெற்ற 15 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் என்.பி.சந்தீப் கண்ணூர் அணிக்காகவும், மொஹமது அஃப்சல் மலப்புரம் அணிக்காகவும் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
 
அதேபோல 2008-09 ஆண்டுகளில் நடைபெற்ற பெண்களுக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் ஜின்ஸி ஜார்ஜ் 56 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
 
சர்வதேச கிரிக்கெட் போட்டியில், ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய நிகழ்வு இருமுறை நடந்துள்ளது.
 
1956ல் இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 53 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளும், டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய சுழல் வீரர் கும்ப்ளே 74 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா!