ஐசிசி தலைவர் பொறுப்பில் இப்போது கங்குலிதான் இருந்திருக்க வேண்டும்… மம்தா பானர்ஜி பேச்சு!

vinoth
ஞாயிறு, 9 நவம்பர் 2025 (21:01 IST)
இந்திய அணி கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் சவுரவ் கங்குலி முதன்மையானவர். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக ஆக இருந்த இந்திய அணியை கடைதேற்றியவர் கங்குலி என்று சொன்னால் அது மிகையாகாது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர்.

அவர் கேப்டனான பிறகு இந்திய அணியின் அனுகுமுறையே மாறியது. இந்திய அணிக்குள் ஆக்ரோஷத்தைப் புகுத்தியவர் என்ற பெருமை கங்குலியையே சாரும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிசிசிஐ தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று மேற்குவங்கத்தில் உலகக் கோப்பைத் தொடரை வென்ற பெண்கள் அணியில் இடம்பெற்ற ரிச்சா கோஷுக்குப் பாராட்டு விழாவில் கங்குலியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி “இப்போது ஐசிசி தலைவராக கங்குலிதான் இருந்திருக்க வேண்டும். இப்போது இல்லை என்றாலும் எப்போதாவது ஒரு நாள் அவர் கண்டிப்பாக அந்த நிலைக்கு உயர்வார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தலைவர் பொறுப்பில் இப்போது கங்குலிதான் இருந்திருக்க வேண்டும்… மம்தா பானர்ஜி பேச்சு!

தோனியின் முக்கியமான சாதனையை சமன் செய்த குயிண்ட்டன் டிகாக்!

மீண்டும் தொடங்கிய சஞ்சு –ஜடேஜா ட்ரேட் பேச்சுவார்த்தை!

ஆசியக் கோப்பை விவகாரம்.. எட்டப்பட்ட சுமூக முடிவு!

5வது டி20 போட்டி மழையால் ரத்து.. தொடரை வென்றது இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments