ஆஹா எல்லா சிம்டம்ஸும் கரெக்டா இருக்கே… ஜட்டுவுடன் செல்ஃபி எடுத்துப் பகிர்ந்த ஜெய்ஸ்வால்!

vinoth
புதன், 12 நவம்பர் 2025 (15:38 IST)
கடந்த சில நாட்களாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக உள்ளது சஞ்சு சாம்சன் – ஜடேஜா டிரேட் பேச்சுவார்த்தை. ஆனால் ஜடேஜாவை சென்னை அணி ட்ரேட் செய்யக் கூடாது என்பது ரசிகர்களின் விருப்பமாகவும், முன்னால் வீரர்களின் விருப்பமாகவும் உள்ளது. ஏனென்றால் ஜடேஜா சென்னை அணிக்காகப் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். 2023 ஆம் ஆண்டு அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்ததே ஜடேஜாதான். அதனால் தோனி அவரை டிரேட் செய்ய அனுமதிக்க மாட்டார் என பலரும் கூறி வருகின்றன.

இந்த டிரேட் குறித்து தற்போது மேலதிக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த டிரேடை முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சஞ்சு சாம்சனைக் கொடுத்துவிட்டு ராஜஸ்தான் அணி ஜடேஜா மற்றும் சாம் கர்ரண் ஆகியோரைப் பெற்றுக் கொண்டுள்ளதாக சொலல்ப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு 48 மணி நேரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதை உறுதிபடுத்துவது போல ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கொல்கத்தாவில் நடந்த பயிற்சியின் போது ஜடேஜாவுடன் செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாவில் பகிர்ந்த்ள்ளார். இதன் மூலம் ஜட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் ஆகவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். மேலும் ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணிக்குப் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த ரஷித் கான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

இந்திய ஏ அணியில் ராகுல் டிராவிட் மகனுக்கு இடம்.. முத்தரப்பு தொடரில் அறிமுகம்..!

சஞ்சு சாம்சன் - ஜடேஜா மாற்றம் நடந்தால், சிஎஸ்கே இந்த வீரரை வாங்க வேண்டும்: அஷ்வின் கொடுத்த ஐடியா..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்… ஸ்ரேயாஸ் ஐயர் சந்தேகம்!

ஜடேஜா- சாம்சன் டிரேட் முடிவதில் தாமதம்… ராஜஸ்தான் அணிக்கு எழுந்த சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments