நம்ம புள்ளைங்கதான் டாப்ல… ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்!

vinoth
வியாழன், 13 நவம்பர் 2025 (08:40 IST)
தற்போது கிரிக்கெட் விளையாடும் அணிகளில் மூன்று விதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இந்தியா உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது ஒரே நாளில் மூன்று விதமான போட்டிகளில் விளையாடினாலும் அதற்கேற்ப வீரர்களைக் கொண்டுள்ளது.

இந்திய அணித் தேர்வுக்குழுவினருக்கு மிகப்பெரும் தலைவலியாக இருப்பது எந்த வீரரை அணியில் தேர்வு செய்வது என்பதுதான். அந்தளவுக்கு தற்போது  சிறப்பான கட்டமைப்பில் உள்ளது இந்திய அணி. அதற்கு சாட்சியாக ஒருநாள் போட்டிகளுக்கான் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை வெளியாகியுள்ளது.

அதில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா முதலிடத்திலும், ஷுப்மன் கில் நான்காம் இடத்திலும், விராட் கோலி ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். இதில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிகாலத்தில் இருக்கும் மூத்த வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கை அணி வீரர்கள்.. ஆனால் எச்சரித்த அணி நிர்வாகம்..!

அர்ஜுன் டெண்டுல்கரை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் ஆர்வம்.. !

நான் வேணும்னா அத செய்யுங்க…ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிபந்தனை விதித்த ஜடேஜா!

ஜடேஜா சம்மதித்தால் மட்டுமே அணி மாற்றப்படுவார்: ஐபிஎல் 2026 புதிய விதிகள்..!

உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ள ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments