ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் - விராட் கோலி முதலிடம், இந்தியா மூன்றாமிடம்

வியாழன், 5 ஜூன் 2014 (12:04 IST)
ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். 
ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது, இப்பட்டியலில் அணிகளில் முதலிடத்தை ஆஸ்திரேலியா பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியாவை இலங்கை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளது.
 
ஒருநாள் போட்டியின்  பேட்டிங் தரவரிசையில் இந்திய அதிரடி வீரர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி 6 வது இடத்திலும், ஷிகர் தவான் ஒரு இடம் பின்தங்கி 8வது இடத்திலும் உள்ளனர். இப்பட்டியலில் முதல் முறையாக முதல் 20 இடங்களில் நுழைந்துள்ள ரோஹித் ஷர்மா 20வது இடத்தை பிடித்துள்ளார். 
 
பந்து வீச்சில் இந்திய பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் பின்தங்கி 5 வது இடத்தை பிடித்து, டாப் 10 வரிசையில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்