கிரிக்கெட் வீரர்கள் அழகிகளுடன் உல்லாசம்: வரலாறு காணாத அபராதம்!

கிரிக்கெட் வீரர்கள் அழகிகளுடன் உல்லாசம்: வரலாறு காணாத அபராதம்!

வியாழன், 1 டிசம்பர் 2016 (11:11 IST)
அழகிகளை ஹோட்டல் அறைக்கு வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்ததாக இரண்டு வங்கதேச வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து அவர்களுக்கு மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


 
 
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது போல வங்கதேசத்திலும் வங்கதேச பிரீமியர் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடரில் வங்கதேச வீரர்கள் அல் அமீன் மற்றும் அமீன் ஹொசைன் ஆகிய இரண்டு வீரர்கள் தங்கள் ஹோட்டல் அறைக்கு அழகிகளை வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
 
இந்த சம்பவம் குறித்து அறிந்த வங்கதேச கிரிக்கெட் சங்கம் இரண்டு வீரர்களுக்கும் 15000 அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்துள்ளது. இது மற்ற வீரர்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இதற்குதான் ஆட்டத்தை நான்கு நாட்களில் முடித்தார்களா?