செழிப்பையும், செல்வத்தையும் தரும் மாதமான செப்டம்பர் மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராஹு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்:
11.09.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14.09.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15.09.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16.09.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து சூர்யன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29.09.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
உங்களூக்கு இந்த மாதம் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.
செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம். பெண்களுக்கு வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும். கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். அரசியல்துறையினருக்கு அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.
உத்திராடம்:
இந்த மாதம் எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும்.
திருவோணம்:
இந்த மாதம் சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும்.
அவிட்டம்:
இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும்.