Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?

மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?
, திங்கள், 10 மே 2010 (18:08 IST)
40, 45 வயதைக் கடக்கும் போது, வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது நாம் யாரையாவது திட்டியிருக்கிறோம், அவமானப்படுத்தியிருக்கிறோம் என்ற சிந்தனை வருகிறது. அவரை அப்படி சொல்லியிருக்கக் கூடாது, அவரைப் போய் அப்படி திட்டிவிட்டோமோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த வயதில் நாம் கூட வளராமல் இருந்திருப்போம். இப்படிப்பட்ட சிந்தனை வரும்போது, மீண்டும் அவர்களிடம் போய் என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பும் இருக்காது. இப்படிப்பட்ட உள் உளைச்சல் இருக்கும்போது என்ன பரிகாரம் செய்யலாம்.

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

இந்த மாதிரியான பாதிப்புகளுக்கெல்லாம், ஜாதகப்படி பார்த்தீர்களென்றால் குல தெய்வக் கோயில், சிலர் இஷ்ட தெய்வம் என்று சொல்வார்கள் இல்லையா, என்னதான் குலதெய்வம் இருந்தாலும் இந்த கோயிலுக்கு வந்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ அங்கு வந்து உட்கார்ந்து சில ஜபம், தபம் இதெல்லாம் செய்யலாம். அவர்களை நினைத்து, அந்த நேரத்தில் இந்த மாதிரியான கேள்வி கேட்டுவிட்டேன். அவர்கள் மனது எவ்வளவு புண்பட்டிருக்கும். கடுமையாக திட்டினேன், வனமையாகக் கண்டித்தேன். சேர வேண்டிய பங்கு சேரவிடாமல் தடுத்தேன், அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருப்பார்கள்.

இதை அவர்களுடைய உள் மனது வரை ஆராய்ந்து பாவத்தை நினைத்து வருத்தப்பட்டாலே போதும். இதற்கு பதிலாக அவர்களுடைய சந்ததிகளுக்கு இவர்கள் உதவலாம். நான் உங்கள் அண்ணனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். மிகவும் நெருக்கமாக இருந்தோம். ஒரு காலகட்டத்தில் இரண்டு பேருக்கும் பிரச்சனை வந்துவிட்டது. இருந்தாலும் நான் உன்னை மதிக்கிறேன். உனக்கு ஏதாவது உதவி வேண்மென்றால் சொல், ஏதாவது செய்கிறேன் என்று கூறலாம், இல்லையென்றால் நோகப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவலாம். இவைகே தக்க பரிகாரங்களாகும்.

Share this Story:

Follow Webdunia tamil