Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூட‌ங்குள‌ம் போரா‌ட்ட‌ம் எ‌ங்கு செ‌ன்று முடியு‌ம்?

கூட‌ங்குள‌ம் போரா‌ட்ட‌ம் எ‌ங்கு செ‌ன்று முடியு‌ம்?
, வெள்ளி, 2 டிசம்பர் 2011 (20:23 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: கூடங்குளம், மராட்டிய மாநிலம் இரத்தினகிரி உள்ளிட்ட இடங்களில் அணு உலைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் எங்கு சென்று முடியும்?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தற்பொழுது நடந்துவரும் கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டங்களெல்லாம் விரைவில் முடிந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அதிகமாக நீடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. தீவிரமடைவது போல் இருந்தாலும், இந்த அணு மின் உலைக்கு உரிய கிரகங்கள் குரு, சனி, செவ்வாய் ஆகும். அணு என்றால் அது சனி கிரகம் வந்துவிடும். மின் உற்பத்தி என்றால் செவ்வாயும், குருவும் வந்துவிடுவார்கள். அணு ஆற்றலைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யக் கூடியது என்பதில் இந்த மூன்று கிரகங்களும் சம்பந்தப்படுகிறது.

தற்பொழுது குரு பகவான் வக்கிரமாகிக் கிடக்கிறார். அதனால்தான் தற்பொழுது போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் டிசம்பருக்கும் இந்தப் போராட்டங்கள் முடிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், டிசம்பர் மத்தியப் பகுதியில் இருந்தோ அல்லது ஜனவரி முற்பகுதியில் இருந்தோ கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான சாத்தியமும் உள்ளது. அதனால், டிசம்பர் 15க்கு மேற்பட்டே மின் உற்பத்தியை எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil