சுவையான பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?

குழம்பு வகைகளில் பருப்பை வைத்து செய்யப்படும் உருண்டை குழம்பு மிகவும் சுவையானது. சூப்பரான சுவையான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்வது என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: கடலை பருப்பு, துவரம் பருப்பு, தேங்காய், புளி கரைசல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு, வெந்தயம், கடுகு, உளுந்து, வெங்காயம், தக்காளி,

துவரம் பருப்பு, கடலை பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்

அரைத்த பருப்புடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, தேங்காய், மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

உருண்டையை கடாயில் போட்டு வறுத்தோ அல்லது ஆவியில் போட்டு அவித்தோ எடுத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், உளுந்து, தாளித்து பின் தக்காளி, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.

பின் அதில் குளம்பு மிளகாய்த்தூள், புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்ட பின் தயார் செய்து உருண்டைகளை சேர்க்கவும்

அதனுடன் அரைத்த தேங்காய் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான உருண்டை குழம்பு தயார்.

வெயில் காலத்தில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Follow Us on :-