Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிரியா மீதான் அமெரிக்க தாக்குதல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

சிரியா மீதான் அமெரிக்க தாக்குதல் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
, வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (20:53 IST)
நேற்று முன் தினம் சிரியாவில் நடத்தப்பட்ட குழந்தைகள் மீதான ரசாயன குண்டு தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியடைய செய்தது. இந்த தாக்குதலில் குழந்தைகள் மட்டுமின்றி  ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் கடும் அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பதிலடி கொடுக்கும் வகையில், சிரியா மீது ஏவுகணைகளை ஏவி தாக்கும்படி, உத்தரவிட்டார்.



 


இந்த உத்தரவை அடுத்து அமெரிக்கப் படையினர் 60க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி சிரியாவை சரமாரியாக தாக்கினர். இதனால், மத்திய ஆசியாவில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை அடுத்து அமெரிக்கா எடுத்துள்ள அடுத்தகட்ட போர் நடவடிக்கையாக சிரியா தாக்குதல் கருதப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க படையின் தாக்கதால் சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் மேற்கொண்ட முதலீடுகளை விற்று, லாபத்தை வெளியே எடுத்தனர். இது சர்வதேச சந்தைகளின் வர்த்தகத்தை பெரிதும் பாதித்தது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் இதன் தாக்கமாக, சரிவுடன் இருந்தன. முன்னணி நிறுவனப் பங்குகள் பலவும் கடும் விலை சரிவை சந்தித்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 221 புள்ளிகள் சரிந்து, 29,706.6 புள்ளிகளாக முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 64 புள்ளிகள் குறைந்து, 9,198 புள்ளிகளாக நிலைபெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பு இனத்தவர் குறித்த கருத்து: மன்னிப்பு கேட்டார் தருண்விஜய்