Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையின் முக்கிய விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவா?

இலங்கையின் முக்கிய விமான நிலையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவா?

Siva

, திங்கள், 29 ஏப்ரல் 2024 (08:34 IST)
இலங்கையின் முக்கிய விமான நிலையத்தை இந்தியா மற்றும் ரஷ்யாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான மத்தள ராஜபக்சே சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக பொறுப்பை இந்திய ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்த 2009 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள மத்தளவில் 2000 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விமான நிலையம் 2013 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

 1300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தை இந்தியா குத்தகைக்கு எடுக்கும் முயற்சிகள் இருந்தது என்றும் இதனை அடுத்து இந்தியா மற்றும் ரஷ்யா நிறுவனங்கள் கூட்டாக இந்த விமான நிலையத்தை 30 ஆண்டுகள் நிர்வாகம் செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ற்கனவே இந்த விமான நிலையத்தின் அருகில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 ஆண்டுகளுக்கு புத்தகத்தை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவகவுடா பேரனை அடுத்து மகன் மீதும் வழக்குப்பதிவு.. பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுக்கப்பட்டதா?