அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. இந்திய தூதரகம் எவ்வளவு தான் அமெரிக்க அரசிடன் இதுபோன்று நடக்கக்கூடாது என கூறி வந்தாலும், அமெரிக்க அரசால் இந்த கொடூர தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்து வந்த தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் கோபு (26) நேற்றிரவு சாப்பிட ஓட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இன வெறியர்கள் சிலர் சரத்தை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சரத்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரத்தை சுட்டு கொலை செய்த குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகை அளிக்கப்படும் என போலீஸார் அறிவித்துள்ளனர்.
இதனால் நொடிந்துபொன சரத்தின் பெற்றோர் சரத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.