Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல் என்பது ஒன்றுதான், கள்ளக்காதல், நல்ல காதல் என்றெல்லாம் இல்லை: சுபவீரபாண்டியன்

காதல் என்பது ஒன்றுதான், கள்ளக்காதல், நல்ல காதல் என்றெல்லாம் இல்லை: சுபவீரபாண்டியன்
, சனி, 29 செப்டம்பர் 2018 (20:12 IST)
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் 'கள்ளக்காதல் என்பது தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமில்லை' என்று அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பால் பல விளைவுகள் ஏற்படும் என்று ஒருசாரரும் இன்னொரு சாரர் இந்த தீர்ப்பை வரவேற்றும் உள்ளனர்.

இந்த நிலையில்   திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப வீரபாண்டியன் அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து கூறியதாவது: கள்ளக்காதல் என்று கூறுவதே தவறான சொல். காதல் என்பது ஒன்றுதான். அதில் நல்ல காதல், கள்ளக்காதல் என்பதெல்லாம் கிடையாது. திருமண உறவை தாண்டிய ஒரு அன்பு என்றுதான் அதற்கு பொருள்

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் நாளையே கணவன், மனைவி வேறொருவருடன் சென்றுவிடுவார்கள் என்று கற்பனை செய்வது தவறு. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் ஒரு விஷயம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மனைவி என்பவர் கணவனுக்கு அடங்கி நடக்க வேண்டிய ஒரு அடிமை இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து இன்னும் பல விவாதங்கள் வரும், வரவேண்டியதும் நல்லதுதான்' என்று கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதல் என்பது ஒன்றுதான், கள்ளக்காதல், நல்ல காதல் என்றெல்லாம் இல்லை: சுபவீரபாண்டியன்