Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதிக்கப்பட்டோரின் தேவைகளை உணர்ந்து உதவிய நடிகை கஸ்தூரி!

பாதிக்கப்பட்டோரின் தேவைகளை உணர்ந்து உதவிய நடிகை கஸ்தூரி!
, வெள்ளி, 23 நவம்பர் 2018 (12:34 IST)
நடிகை கஸ்தூரி கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ரூ .12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களுடன் கிளம்பினார்.
 
கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.
 
புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தார். 
 
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, 'சொல்ல முடியாத துயரத்தில் உள்ள டெல்டா மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன்.  என்னால் முடிந்த அளவில், ரூ.12 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை நானே நானும் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்ல உள்ளேன். 
 
1000 குடும்பத்திற்கு தேவையான அதிநவீன வாட்டர் ஃபில்டர் மற்றும் போர்வைகள், கொசுமருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள் சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்புகிறோம்.
 
உணவு பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளிருந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், குடிநீர் பற்றாக்குறை பூதாகரமாக தலையெடுத்துள்ளது. இன்னும் நாட்கள் செல்ல செல்ல, சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மிக பெரிய தேவையாக இருக்க போகிறது. இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்பு கருவிகளை அனுப்புகிறோம். 
 
இந்த சுத்திகரிப்பு கருவிகள் (syphon filter) பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை. எங்கும் எடுத்து செல்லலாம், சுலபமாக பயன்படுத்தலாம், எத்தனை மாசுபட்ட தண்ணீரையும் தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். கொதிக்கவைக்க அவசியமில்லை. 
webdunia
 
பிளாஸ்டிக் பாட்டில்களையும், கேன்களையும் நாடவேண்டியதில்லை, இரண்டு வருடங்களுக்கு குறையாமல் செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இது வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது, இங்கு நம் பயன்பாட்டிற்காக ஆயிரம் சுத்திகரிப்பான்களை உடனடியாக தயாரித்து அனுப்பியிருக்கும் சென்னை ராமா குடிநீர் சுத்திகரிப்பான் நிறுவனத்திற்கு நன்றி. முதல் கட்டமாக 1000 பில்டர்கள் வழங்குகிறோம் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரவுண்டுகட்டிய மக்கள்: ஆடிப்போன பொன்னார்: மன்னார்குடியில் பரபரப்பு