Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோட் படத்தில் சிபிஐ ஆபிசராக விஜய் & கோ.. பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

கோட் படத்தில் சிபிஐ ஆபிசராக விஜய் & கோ.. பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

vinoth

, வியாழன், 18 ஏப்ரல் 2024 (07:44 IST)
விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். தற்போது நடித்து வரும் கோட் படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என அறிவித்துள்ளார். இதனால் தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில்  செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக ஒரு கதாபாத்திரமாக உருவாக்கப்பட உள்ளார் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஒய் ஜி மகேந்திரன் “படத்தில் அவர்களெல்லாம் சிபிஐ ஆஃபீசர்களாக வருகிறார்கள். நான் ஒரு சிறு காட்சியில் நடித்துள்ளேன். எனக்கு விஜய்யோடுதான் காட்சி. நான் பேசிய ஒரு வசனம் கட் ஆகாமல் வந்தால் தியேட்டரில் விஜய் ரசிகர்களின் விசில் பறக்கும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகப் பேசினாரா அமீர்கான்?… வைரல் வீடியோ குறித்து சைபர் கிரைம் பிரிவில் புகார்!