Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்தி 25 நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் கலந்துகொள்ளாதது ஏன்… ரசிகர்கள் கேள்வி!

கார்த்தி 25 நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் கலந்துகொள்ளாதது ஏன்… ரசிகர்கள் கேள்வி!
, திங்கள், 30 அக்டோபர் 2023 (08:03 IST)
2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படம் மூலமாக அறிமுகமான கார்த்தி இதுவரை 24 படங்கள் நடித்துள்ளார். அவரது 25 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஜப்பான் கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்தினர். நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கார்த்தியை வைத்து ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆனால் கார்த்தியின் முதல் படத்தை இயக்கி அவருக்கு வாழ்க்கைக் கொடுத்த இயக்குனர் அமீர் கலந்துகொள்ளவில்லை. இதுபற்றி ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் இயக்குனர் அமீரை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். பருத்திவீரன் ரிலீஸின் போதே இயக்குனர் அமீருக்கும் கார்த்தி தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அது இதுவரை சமாதானமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபாவளி ரேஸில் தில்லாக இறங்கும் விக்ரம் பிரபுவின் ரெய்ட் திரைப்படம்!