Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செப்.23இல் வடசென்னை இசை வெளியீடு

செப்.23இல் வடசென்னை இசை வெளியீடு
, ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (18:43 IST)
வடசென்னை படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 
வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா, சமுத்திர கனி, அமீர் உள்பட பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்து உள்ள படம் வடசென்னை.
 
இந்த படம் வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது. பெரும் அரசியல் பின்னணியை கொண்டதாகவும் படம் உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே இப்படம் தனுஷ்க்கு மிக முக்கியமான படமாக பார்க்ப்படுகிறது. 
 
இந்நிலையில் வட சென்னை வரும் அக்டோபரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே வரும் செப்டம்பர்  23 படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு சந்தோஸ் நாராயணன் இசை அமைத்து உள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் படத்தை தயாரித்து உள்ளது. லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி நடிக்க மாட்டாரா ஆல்யா மானசா!