Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனி ஒருவன் 2 வின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இல்லையா?

தனி ஒருவன் 2 வின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இல்லையா?
, வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:13 IST)
2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தொடர்ந்து ரீமேக் படங்களாக இயக்கி வந்த ஜெயம் ராஜாவின் முதல் சொந்தக் கதை இந்த திரைப்படம்.

இந்த படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்துக்கு இணையாக வில்லனாக நடித்த அரவிந்த் சாமியின் கதாபாத்திரமும் வெற்றி பெற்றது. அதே போல படத்துக்கு மிகப்பெரிய பலமாக ஹிப் ஹாப் ஆதியின் இசையும் அமைந்தது.

இந்நிலையில் இப்போது இரண்டாவது பாகத்துக்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் அதில் ஹிப் ஹாப் ஆதியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் இரண்டாம் பாகத்துக்கு அவர் இசையமைக்க வில்லை என்றும் அவருக்கு பதில் சாம் சி எஸ் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் வெற்றிமாறன் கூட்டணி எப்போது அமையும்? இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தகவல்!