Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலவையான விமர்சனங்களால் வசூலில் அடிவாங்கிய டன்கி… முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

கலவையான விமர்சனங்களால் வசூலில் அடிவாங்கிய டன்கி… முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?
, வெள்ளி, 22 டிசம்பர் 2023 (11:01 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. இந்நிலையில் அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய டன்கி திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது.

இந்த படம் ரிலீஸானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் முதல் நாளில் இந்த படம் 30 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வியாழக் கிழமை வேலைநாள் என்பதால் இந்த வசூல் குறைவு காரணமாக இருக்கலாம் என சொலல்ப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தி & பிரேம்குமார் இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!