Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னது ரூ.1000 கோடியா...? 2.0 கலெக்‌ஷன் அப்டேட்

என்னது ரூ.1000 கோடியா...? 2.0 கலெக்‌ஷன் அப்டேட்
, திங்கள், 17 டிசம்பர் 2018 (19:03 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாணட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2.0 திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
உலகம் முழுவது வெளியான இந்த படம் எட்டு நாட்களில் ரூ.556 கோடி வசூலித்ததாக செய்திகல் வெளியானது. இன்னும் தமிழகம் முழுவதும் சுமார் 398 திரைகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது என தெரிகிறது. 
 
சென்னை மாநகரில் மட்டும் இன்னும் சுமார் 80 திரைகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, உலகம் முழுவதும் தமிழ் மொழி பதிப்பில் ரூ.461 கோடி தெலுங்கு, இந்தி பதிப்புகள் சேர்ந்து ரூ.285 கோடி என மொத்தம் ரூ.750 கோடியை வசூலித்திருக்கிறதாம். 
 
அடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை வருவதால் படம் எப்படியும் ரூ.1000 கோடி வசூலை தொடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் தயாரிப்பு குழுவினர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பேட்ட' படத்தில் சசிக்குமாரின் கேரக்டர் இதுதான்?