Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"நோட்டா" பட நாயகனை வாழ்த்திய பிரபல கிரிக்கெட் வீரர்

, வெள்ளி, 5 அக்டோபர் 2018 (11:52 IST)
அர்ஜுன் ரெட்டி புகழ் தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டாவின் முதல் தமிழ் படம் "நோட்டா" இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். சத்யராஜ், நாசர், மெஹ்ரீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
அதிரடி அரசியல் படமாக உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் நோட்டா படக்குழுவினர் வெளியிட்ட ப்ரோமோஷன் வீடியோ ஒன்றில் விஜய் தேவர்கொண்டா படத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் விமர்சனம் செய்துள்ளதாக பரபரப்பு புகார்களை  தெரிவித்திருந்தனர். 
webdunia
இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த பிரபல கிரிக்கெட் ஜாம்பவானாக ஹர்பஜன்சிங், நோட்டா படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவிற்கு  பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதில், வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி. இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து  போனேன். இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் கொடுத்தது. வாழ வைக்குற தெய்வம். உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள் என்று தமிழில்  ட்வீட் செய்துள்ளார்.
webdunia
இது மக்கள் மத்தியில் ஹர்பஜன் சிங் மீதான மரியாதையை ஏற்படுத்தியதோடு விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்தியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பலமான பிக்பாஸ் யாஷிகாவின் உண்மை முகம்