Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விளம்பரங்களில் நடிக்க நயன்தாரா கேட்கும் சம்பளம்: வாய் பிளந்து நிற்கும் கோலிவுட்!!

விளம்பரங்களில் நடிக்க நயன்தாரா கேட்கும் சம்பளம்: வாய் பிளந்து நிற்கும் கோலிவுட்!!
, சனி, 22 ஜூலை 2017 (18:12 IST)
நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறார். ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா 5 கோடி ரூபாய் வாங்குவது குறிப்பிடத்தக்கது.


 
 
இந்நிலையில் படங்களை தாண்டி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் நயன்தாரா. பிரபல நகை கடை விளம்பரத்தில் நடித்த அவர் தற்போது வேறு ஒரு விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா விளம்பரத்தில் நடிப்பது இப்பொழுது செய்தி அல்ல அந்த விளம்பரத்தில் நடிக்க அவருக்கு பேசப்பட்ட சம்பளம் தான் செய்தி. அந்த விளம்பரத்திற்காக அவருக்கு ரூ.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விளம்பரங்களுக்கு இவ்வளவு சம்பளமா என வாய் பிளந்து நிற்கிறது கோலிவுட்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவேகம் படத்தின் காதலாடா பாடல் இவருக்காக எழுதப்பட்டது: பாடலாசிரியர் கபிலன்!