Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காந்தாரா 2 திரைப்படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார் நடிகர்!

காந்தாரா 2  திரைப்படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார் நடிகர்!

vinoth

, புதன், 1 மே 2024 (07:42 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகள் தொடங்கியுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தெரிவித்திருந்தார். படத்தின் 100 ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மே 3 ஆம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள்!