Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்தியின் ஜப்பான் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல்!

கார்த்தியின் ஜப்பான் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல்!
, சனி, 4 நவம்பர் 2023 (07:17 IST)
2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படம் மூலமாக அறிமுகமான கார்த்தி இதுவரை 24 படங்கள் நடித்துள்ளார். அவரது 25 ஆவது படமாக உருவாகி வருகிறது ஜப்பான் திரைப்படம். இந்த படத்தை இயக்குனர் ராஜுமுருகன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார்.

தீபாவளியை முன்னிட்டு ஜப்பான் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நவம்பர் 10 ஆம் தேதி தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே இந்த படம் ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு தீபாவளி ரிலீஸ் படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் நவம்பர் 10 ஆம் தேதியே ரிலீஸ் ஆகவுள்ளது என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜப்பான் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 36 நிமிடங்கள் ஓடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்துக்கு சென்சார் போர்டு UA சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரியார் பிறந்த தினத்திலே… அண்ணாவின் ஊரிலே விழுந்தவன் மாபெரும் தலைவனாக வருவான் –டிடிஎஃப் வாசன் குறித்து மஞ்சள் வீரன் இயக்குனர்!