Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் பங்கேற்புக் காரணமாக கங்கனா படத்தின் ஷூட்டிங் தள்ளிவைப்பு!

தேர்தல் பங்கேற்புக் காரணமாக கங்கனா படத்தின் ஷூட்டிங் தள்ளிவைப்பு!

vinoth

, வெள்ளி, 29 மார்ச் 2024 (07:12 IST)
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்தின் சமீபத்தைய படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் பாலிவுட்டைத் தவிர்த்து இப்போது கங்கனா தென்னிந்திய சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். தலைவி படம் மூலம் தமிழில் ரி எண்ட்ரி கொடுத்த அவர், சந்திரமுகி 2 படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் அவர் மாதவனோடு இணைந்து ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்கள் நடந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது கங்கனா நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவதால் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதனால் அவர் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிந்ததும் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறேன் என அவர் தயாரிப்பாளர்களிடம் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்படி இருக்கு விஜய் தேவரகொண்டாவின் ‘பேமிலி ஸ்டார்’ டிரைலர்?