Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‘தக்லைஃப்’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமல்.. சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பு..!

‘தக்லைஃப்’ படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கமல்.. சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பு..!

Siva

, திங்கள், 6 மே 2024 (18:21 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘தக்லைஃப்’ 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டதால் அவர் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பை மணிரத்னம் நடத்தி வந்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டு உள்ளார் என்றும் டெல்லியில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கமல்ஹாசன், சிம்பு உள்பட பலர் இந்த படைப்பின் கலந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சற்று முன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் எக்ஸ் தல பக்கத்தில் மே 8-ம் தேதி இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த அறிவிப்பு அனேகமாக இந்த படத்தில் சிம்பு இணைந்தது குறித்து அறிவிப்பாக இருக்கும் என்றும் அது மட்டுமின்றி சிம்புவின் போஸ்டர் அல்லது வீடியோ வெளியாகும் என்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
 
சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகுமா என்பதை மே 8ஆம் தேதி வரை பொறுத்து இருந்து பார்ப்போம். 

webdunia
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் ‘ராயன்’ ரிலீஸ் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு.. சன் பிக்சர்ஸ் அதிரடி..!