Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜகவில் இணைகிறாரா நடிகர் பிரகாஷ்ராஜ்?

prakashraj

Sinoj

, வியாழன், 4 ஏப்ரல் 2024 (18:08 IST)
நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
 
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட  நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர  பிரசாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளன.
 
ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சியினரை விமர்சித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். 
 
இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
அதில், சென்னை விலக்கு வாங்குகிற அளவுக்குப்  பாஜகவிடம் பணம் இல்லை என்று தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
சமீபத்தில் பிரதமர் மோடி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசியதையும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிமாறன் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!