Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியன் 2 படத்தில் விவேக்கின் மீதிக்காட்சிகள் ஷுட்டிங்… ஷங்கர் போட்ட திட்டம்!

இந்தியன் 2 படத்தில்  விவேக்கின் மீதிக்காட்சிகள் ஷுட்டிங்… ஷங்கர் போட்ட திட்டம்!
, சனி, 22 ஏப்ரல் 2023 (08:15 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது.

இந்த படத்தில் நடித்திருந்த விவேக்  மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் ஷூட்டிங் முடிவதற்குள் காலமாகிவிட்டனர். இந்நிலையில் இப்போது அவர்களின் மீதக் காட்சிகளை தொழில்நுட்ப உதவியோடு படமாக்க உள்ளாராம் ஷங்கர். இதற்காக வி எஃப் எக்ஸ் குழுவினர் இப்போது வேலைகளை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து மூன்று ஹீரோக்களுக்கு கதை சொன்ன இயக்குனர் ஹரி!