Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாரி செல்வராஜ் & துருவ் விக்ரம் படத்தில் நடந்த ஹீரோயின் மாற்றம்!

மாரி செல்வராஜ் & துருவ் விக்ரம் படத்தில் நடந்த ஹீரோயின் மாற்றம்!

vinoth

, வியாழன், 9 மே 2024 (07:26 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. படத்துக்கு பைசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

போஸ்டரில் காளமாடன் என்ற கடவுளின் கீழ் துருவ் விக்ரம் இருப்பது போன்று போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூடட்ணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.

இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தர்ஷனா விலகிக் கொண்டதால் அந்த கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தள்ளி வைக்கப்பட்டதா சிம்பு தேசிங் பெரியசாமி படம்?... பின்னணி என்ன?