Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குட் பேட் அக்லி படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்!

குட் பேட் அக்லி படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்!

vinoth

, திங்கள், 8 ஏப்ரல் 2024 (07:24 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் ஜூன் 13 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் சென்னை ஈ வி பி ஸ்டுடியோவில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் ஏற்கனவே ஆதிக்கின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!