Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று ரிலீஸ் ஆகிறது கவினின் ஸ்டார் பட டிரைலர்!

இன்று ரிலீஸ் ஆகிறது கவினின் ஸ்டார் பட டிரைலர்!
, சனி, 27 ஏப்ரல் 2024 (11:01 IST)
டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் கவனிக்கப்படும் ஒரு நடிகராகியுள்ளார். இப்போது அவர் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்டார் படத்தை டாடா கவின் நடிப்பில் உருவாக்கி வருகிறார் இயக்குனர் இளன்.

இந்த படத்தை நித்தம் ஒரு வானம் படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் நிறைவுற்றது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து விண்டேஜ் லவ் என்ற பாடல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

இந்த படம் முடிந்து சில மாதங்கள் ஆகியும் தேர்தல் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் மே 10 ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காத்து வாங்கும் திரையரங்குகள்… விஷாலின் ரத்னம் முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?