Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் சார்லி நடிப்பில்,மாறுபட்ட களத்தில் திரில்லர் படம் “ஃபைண்டர்”

நடிகர் சார்லி நடிப்பில்,மாறுபட்ட களத்தில் திரில்லர் படம் “ஃபைண்டர்”

J.Durai

, திங்கள், 15 ஏப்ரல் 2024 (07:33 IST)
Arabi production  சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம்  தயாரிக்க,நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படமான  “ஃபைண்டர்” திரைப்படம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
 
சார்லி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.  
 
செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் சார்லி தன் குடும்பத்தோடு இணையத் துடிக்கிறார்.இந்த வழக்கை கையாளும் நாயகன் குற்றத்தின் பின்னணியை எப்படி உடைத்து சார்லியை காப்பாற்றுகிறார் என்பதாக பரபரப்பான காட்சிகளுடன், அதிரடி திருப்பங்களுடனும், ஒரு அட்டகாசமான திரில்லர் அனுபவம் இருக்கிறது  என்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.
 
செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத்தரும் நிறுவனத்தை பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னைப் பின்னணியில்  இப்படத்தின் திரைக்கதை  அமைக்கப்பட்டுள்ளது
 
இருக்கை நுனியில் ரசிகர்களை இருத்தி வைக்கும் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்குவதோடு,  இப்படத்தில் முக்கியமான வேடத்திலும் நடித்துள்ளார். 
 
நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார்.  இவர்களுடன் செண்ட்ராயன், கோபிநாத் சங்கர், நடிகை தாரணி மற்றும் பிரானா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 
 
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளில்  இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 
 
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது திரை வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. Viyan ventures சார்பில் இயக்குநர்  வினோத் ராஜேந்திரன் இப்படத்தை வெளியிடுகிறார்.
 
வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது - வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி